இந்து சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை நாட்டின் சிரசாக அமைந்ததே யாழ்ப்பாணக்குடாநாடு எனக் கூறலாம்.

குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய பல்வகைப்பயிர்களும் செழித்துவளரும் பொன் விளையும் பூமி எனக் கூறலாம். இங்கு சைவமும், தமிழும் ஒருங்கே வளர்ந்து மேலும் இக்கிராமத்தை மேலும் அழகுறச்செகிறது. இக்கிராமத்திலேதான் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் உதித்து சைவத்துக்கும் தமிலுக்கும் தொண்டாற்றினார். சிறுப்பிட்டி கிராமம் ஒரு பெரிய கிராமமாகையால் இதனை ஐந்து பகுதிகளாக {வடக்கு, கிழக்கு, தேற்கு, மேற்கு, மத்தி} என பிரித்திருந்தனர். இதில் சிறுப்பிட்டி மேற்கு பகுதியை அழகுறச்செயும் வகையில் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் அமைந்துள்ளது.

சில நூற்றாண்டுக்கு முன்பாக அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட்ட மக்கள் தங்கள் சமயத்தை வளர்க்கும் பொருட்டு ஒரு பனந்தோப்பு மத்தியில் இருந்த வேப்பமர நிழலில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்த அடிப்படையில் உருவாக்கப்படதே ஸ்ரீ ஞானவைரவர் ஆலயமாகும்.

சூலத்தை வைத்து வழிபட்டுவரும் காலத்தில் வாழ்ந்த அடியவர்களின் வழித்தோன்றலில் ஒருவரான இளையதம்பி வேலுப்பிள்ளை என்பவர் அடியார்களின் ஒத்துளைப்புடன் இவ்ஆலயத்துக்கென ஒரு சுண்ணாம்புக்கல்லிலாலான கட்டிடத்தை கட்டி அதில் ஞானவைரவர் விக்கிரகத்தை இஸ்தாபித்து பூசைகளை மேற்கொண்டு வழிபட்டுவரலாயினர். இப்படி வரும் காலத்தில் ஆலயத்தில் எற்பட்ட சிற்சில பிரச்சினைகளால் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆலயம் பூசைகள் எதுவும் இன்றி தேடுவாரற்ற நிலயில் சில ஆண்டுகளாக இருந்தமயால் கறையான் புற்று மூடி ஆலயம் சிரழிந்துவிட்டது.

பாகம் 2

இக்காலத்தில் ஆலயம் அனாதரவான நிலயில் இருப்பதை மக்களுக்கு உணர்த்தி அவர்களின் ஆனவத்தை அடக்கும் பொருட்டு எம்பெருமான் திருவுளம் கொண்டு தினமும் பகல் 12 மணிக்கு மணியடித்து பூசை நடப்பது போன்ற ஒலியும், மாலை 6 மணிக்கு பிற்பாடு ஓர் கறுத்த நாயுடன் ஒருவர் ஆலயச்சூழலில் வலம் வருவதும் நாளாந்த அற்புத நிகழ்ச்சியாகிவிட்டது. இதனால் மக்கள் ஆலயச்சூழலுக்கு ஓர் அச்ச உணர்வுடனேயே செல்வதும், மாலை ஆனவுடன் வீட்டைவிட்டு வெளியில் வருவதும் இல்லை. இப்படியே சில ஆண்டுகள் களிந்தன.

இவ்வாறிருக்கும் காலத்தில் இக் கிராமத்தில் பிறந்திருந்த கார்த்திகேசு செல்லப்பு என்பவர் தனது இளம் வயதில் மலேசியாவில் காட்டு இலாகாவில் பணிபுரிந்து வரும் காலத்தில் தவறுதலாக ஏற்பட்ட விபத்தின் கரணமாக வலதுபக்க இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட ஊனத்தினால் தான் பிறந்த மண்ணுக்கு வரவேண்டும் என்ற ஆவலில் சிறுப்பிட்டி மேற்கு கிராமத்துக்கு வந்து ஆலய சூழலில் வாழ்ந்துவந்ததனது சகோதரி குஞ்சுப்பிள்ளையுடன்வசித்து வந்தார். இவ்வாறு வசித்துவரும்போது எம்பெருமான் நிகள்த்தும் அற்புத நிகள்வயும் இவர் காணத்தவறவில்லை. அதனை தனது சகோதரியிடம் கேட்டு விபரத்தை அறிந்து இவ்வாலயத்தை அமைக்க திடசங்கற்பம் கொண்டார்.

அதன் பிரகாரம் இவ்வாலயத்தை முன்பு நிர்வகித்து வந்த இளயதம்பி வேலுப்பிள்ளையுடன் கதைத்து தானும் முன்னின்று இருவருமாக அக்காலத்தில் வாழ்ந்திருந்த இளைஞர்களின் உதவியோடு ஒவ்வொரு விடக்கச்சென்று பணம் சேகரித்து ஆலயம் அமைக்கத் தொடங்கினார்கள். அப்போது ஆலயம் ஒரு கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும் என்ற திட்டம் அவர்களுக்குத் தோன்றவே சொத்தியப்ப என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கார்த்திகேசு செல்லப்பு அவர்களின் தலமயின் கீழ் இளையதம்பி வேலுப்பிள்ளை, வல்லிபுரம் சின்னையா, கந்தர் வல்லிபுரம், வேலுப்பிள்ளை கனகசபை, சண்முகம் இளையதம்பி, குட்டியர் இராசா, குட்டியர் சின்னத்துரை, கார்த்திகேசு தம்பிப்பிள்ளை, வல்லிபுரம் தம்பிமுத்து, ஆகியோர் கொண்ட ஒரு பரிபாலனசபையும் அமைக்கப்படது…

பாகம் 3

இவர்களின் பெருமுயற்சியாலும் இவர்களுக்கு உதவியாக உழைத்த அடியவர்களின் ஒத்துழைப்பினாலும் கருவறை, அர்த்தமண்டபம், மிகாமண்டபம், இஸ்தம்பமண்டபம் என்பன கட்டிமுடிக்கப்பட்டு இவ்வாலய அமைப்புக்கேற்றவாறு பழைய கிணறு நிரப்பப்பட்டு புதிய திருமஞ்சக் கிணறும் அமைத்து முடித்து கருவறையில் முன்பே வழிபட்டு வரப்பட்ட ஞானவைரவர் விக்கிரகமும், புதிதாக ஆலயத்துள்ளே வலப்பக்கத்தில் பிள்ளயார் விக்கிரகமும், இடப்பக்கத்தில் முருகன் விக்கிரகமும், வடக்கு வீதியில் முதலியார் {தற்போது சிவலிங்கம்} என ஒரு கல்லையும் இஸ்தாபித்து 1954ம் ஆண்டு தை மாதம் 4ம் நாள் திங்கட்கிழமை அத்த நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஆலயத்தில் நித்திய நைமித்திய பூசைகளும் காலத்துக்குக்காலம் விசேட பூசைகள் பஜனைகள் என ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக ஆல்யம் வளர்ந்து வந்தது. ஆலயம் அமைந்த காலம் தொட்டு சொத்தியப்ப என்று அழைக்கப்படும் செல்லப்புவுக்கு உதவியாக ஆலய தொண்டுகளிலும், ஆலய வளர்ச்சியிலும் இன்றுவரை முக்கிய பங்கற்றியவர்களாக எம்முடன் வாழ்ந்துவரும் சைவப்ப என்று அழைக்கப்படும் தம்பு இராமநாதன் அவர்களையும், சின்னையா வைத்தியலிங்கம் அவர்களையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

.
இதனைத் தொடர்ந்து காலத்திற்குக்கலாம் ஆலய பரிபாலனத்தை மேற்கொண்டுவரும் பரிபாலன சபைகளின் முயற்சியால் ஆலயம் வளர்ச்சிப்பாதையில் சென்று மணிக்கூட்டுக்கோபுரம், மடைப்பள்ளி, வசந்தமண்டபம், பிள்ளையார் ஆலயம், முருகன் ஆலயம், நவக்கிரகம், சிவன் ஆலயம், வாகனசாலை, சுற்று மதில், கிணறு, வெளிமண்டபம், தேர், தேர்முட்டி, உள்வீதிமண்டபம் அமைத்தல் நீர்விநியோகம் என பல திருப்பணி வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஆலய பூஜைகளும் முன்னேற்றமான பாதையில் சென்று நித்தியபூஜை, விஷேட நாட்களுக்கான உற்சவம், வெள்ளிக்கிழமை நாட்களுக்கான பூஜைகள், தேர்த்திருவிழாவோடு கூடிய அலங்கார உற்சவமும் அத்துடன் காலம் தவறாது கும்பாபிஷேகமும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. திருப்பணி வேலைகள், உற்சவங்கள் போன்றவற்றி ற்கு இக்கிராமத்தை சேர்ந்த அடியவர்களினதும், வெளிநாட்டில் வாழும் இவ்வூர் அடியவர்களினதும் பங்களிப்புக்களே தாராளமாக கிடைத்து நிறைவேற்றப்பட்டு வருகின்றது.

முற்றும்…     

Von Admin