மேஷம்
அசுவினி : உங்களது உழைப்பை பணியிடத்தில் புரிந்து கொள்வார்கள்.
பரணி : நேர்மையாக பணிபுரிவதால் பிரச்னையில் இருந்து தப்புவீர்கள்.
கார்த்திகை 1 : எதற்காகவும் உணர்ச்சி வசப்பட வேண்டாம். புதிய வாய்ப்பு தேடி வரும்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4 : கடந்த கால உழைப்பின் பலன் உங்களை தேடி வரும்.
ரோகிணி : பிறரது பிரச்னையில் தலையிட வேண்டாம். பேச்சில் கவனம் தேவை
மிருகசீரிடம் 1,2 : தேவையில்லாத செலவுகளை செய்ய வேண்டாம்

மிதுனம் 
மிருகசீரிடம் 3,4 : எதிலும் இருந்து வந்த தாமத நிலை மாறும். உற்சாகம் பெருகும்.
திருவாதிரை : உங்களுடைய சில பழக்கத்தால் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள்
புனர்பூசம் 1,2,3 : நண்பர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொள்வார்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : உங்களது விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற ஆரம்பிக்கும்.
பூசம் : நற்செயலால் பாராட்டுப் பெறுவீர்கள். உற்சாகம் கூடும்
ஆயில்யம் : உங்களின் செயலால் குடும்பத்தினருக்கு பெருமிதம் ஏற்படும்.

சிம்மம்
மகம் : குடும்பத்தினருக்கு கூடுதல் நன்மை ஏற்படும். உற்சாகம் குறையாது.
பூரம் : புதியவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். நல்லெண்ணம் மேலோங்கும்.
உத்திரம் 1: சிறந்த செயலை செய்ய குறுக்கு வழியை நாட வேண்டாம்.

கன்னி
உத்திரம் 2,3,4 : பெற்றோர்களுடைய பொருளாதார நிலை உயரும்.
அஸ்தம் : கூடுதல் முயற்சியால் தொழிலில் வெற்றி அடைவீர்கள்
சித்திரை 1,2 : பயணங்களில் எச்சரிக்கை தேவை. சிக்கல்கள் தீரும்.

துலாம்
சித்திரை 3,4: முயற்சியில் வெற்றி கிடைக்கும். நிதி நிலை சீராகும்.
சுவாதி : வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். ஆதாயம் கூடும்.
விசாகம் 1,2,3 : குடும்பத்திற்காகச் செலவு செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்று பிரித்து அறிவீர்கள்.
அனுஷம் : இன்று குடும்பத்தினருடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம்.
கேட்டை : கடந்த காலத்தில் தொழிலில் இருந்து வந்த தடைகள் அகலும்.

தனுசு
மூலம் : புதிய செயல்களின் மூலம் புத்துணர்ச்சி கிடைக்கும்.
பூராடம் : இன்று தொழிலில் வரவு குறைந்து செலவு அதிகமாகும்.
உத்திராடம் 1 : பதவியை பிடிக்க நேர்மையற்ற வழியில் செல்ல வேண்டாம்.

மகரம்
உத்திராடம் 2,3,4 : உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவி செய்ய காத்திருப்பர்.
திருவோணம் : முன்பு இருந்த தாமதம் நீங்கும். பணியிட பிரச்னை மறையும்.
அவிட்டம் 1,2 : அதிகமாக உழைக்க வேண்டி வந்தாலும்கூட உற்சாகமான நாள்

கும்பம்
அவிட்டம் 3,4 : உங்களது முயற்சிக்கு உடனுக்குடன் நன்மை கிடைக்கும்.
சதயம் : தாயார் உடல்நிலை பற்றி இருந்து வந்த கவலை தீரும்.
பூரட்டாதி 1,2,3 : உயர்ந்த நிலையை அடைய முயற்சி செய்வீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : வெளியூர் பயணத்தால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.
உத்திரட்டாதி : செயல்களில் வெற்றி கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.
ரேவதி : குழந்தைகளால் பெருமிதம் அடைவீர்கள். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

Von Admin