இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் முருகன். பங்குனி உத்திரத்தின் அழகன் முருகன். நிறைய தெய்வங்களுக்கு இந்த பங்குனி உத்திர திருநாளில் திருமண வைபவம் நடந்திருக்கிறது. இந்த நாளில் முருகப்பெருமானினை வழிபாடு செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் சீக்கிரம் திருமணம் நடக்கும்.

சிவன் பார்வதி திருமணம், முருகன் தெய்வானை திருமணம், மகாலட்சுமி மகாவிஷ்ணு திருமணம், இந்த நாளில் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த நாளில் தான் ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததாகவும் புராணங்கள் சொல்கிறது. இத்தனை சக்தி வாய்ந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடாமல் இருந்தால் நம்முடைய இந்த பிறவி ஈடேறுமா. இந்த பங்குனி உத்திர திதியானது எந்த நேரத்தில் பிறந்து, எந்த நேரம் வரை இருக்கிறது. முருகப்பெருமானை ஜோதி வடிவில் காண விளக்கை ஏற்றி வழிபாடு செய்யலாம். ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழிபாட்டு முறை இந்த பதிவில் உங்களுக்காக

10-4-2025 மதியம் 2:07pm மணிக்கு இந்த பங்குனி உத்திர திதியானது பிறக்கிறது. 11-4-2025 மாலை 4:11pm மணி வரை இந்த பங்குனி உத்திர திதியானது இருக்கிறது. பங்குனி உத்திர திருவிழாவானது வெள்ளிக்கிழமை 11-4-2025 தான் கொண்டாடப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து இந்த முருக பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர தினம் வந்திருப்பது இரட்டிப்பு சிறப்பு. காரணம் இன்றைய தினத்தில் முருகனை வழிபாடு செய்து வேண்டிக் கொண்டால் மகாலட்சுமியின் அருளும், சுக்கிர பகவானின் அருளும் ஒரு சேர கிடைக்கும். வருமானம் பெருகும்.

குறிப்பாக இந்த பங்குனி உத்திரத்தில் வருமானம் பெறுக நாம் செய்ய வேண்டியது என்ன. – முருகனுக்குப் பிடித்த திணை மாவு விளக்கு. மா விளக்கு போடுவது போலவே தான். திணை மாவில் கொஞ்சம் தேன், நாட்டு சர்க்கரையோ அல்லது வெல்லமோ சேர்த்து பிசைந்து மாவிளக்கு பிடிப்பது போலவே பிடித்து அதில் கொஞ்சம் நெய் விட்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி முருகன் முன்பு காண்பிக்க, நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் அந்த தினை மாவு ஜோதி ரூபத்தில், முருகன் உங்களுக்கு காட்சி தருவான். இது பக்தர்கள் மனதில் இருக்கும் நம்பிக்கை. 2 திணை மாவு விளக்குகள் செய்து, இந்த தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.

நீங்களும் இந்த பங்குனி உத்திரத்தன்று, இந்த விளக்கை ஏற்றி ஜோதி ரூபத்தில் முருகனை காணலாம். நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிச்சயம் முருகன் தரிசனம் செய்யலாம். இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு முருகனுக்கு உகந்த இந்த ஒரு பாடலையும் படியுங்கள். கந்தபுராணத்தை முழுமையாக படித்த பலனும் உங்களை வந்து சேரும். –

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே! ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்! ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!

இதையும் படிக்கலாமே: துயரங்களைப் போக்கும் மங்கள பிரதோஷம் இந்த பாடல் நம்மில் நிறைய பேருக்கு தெரியும். இருந்தாலும் இந்த பாடலை குறிப்பிட்டு இந்த தினை மாவு விளக்கு ஏற்றி வைத்து, அந்த தீபச்சுடரின் முன்பு, பங்குனி உத்திரத்தன்று உச்சரிப்பது அதி சிறப்பு வாய்ந்த பலனை தரும். கோடான கோடி நன்மைகளை நம் குடும்பத்திற்கு செய்யும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Von Admin