நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களும் பிரச்சனைகளும் இருக்கும். இந்த கஷ்டங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் காரணம் நம்முடைய கர்ம வினைகள் தான் என்று நம் அனைவருக்கும் தெரியும். 

அப்படிப்பட்ட கர்ம வினைகள் நீங்குவதற்கும் நம்முடைய வாழ்க்கையில் இதுவரை நாம் அனுபவித்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதற்கும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கும் பங்குனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். பங்குனி கடைசி வெள்ளி வழிபாடு பங்குனி மாதம் என்பது வருடத்தின் கடைசி மாதம் .அந்த கடைசி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்புக்குரியது.

பொதுவாகவே பங்குனி வெள்ளி என்பது சிறப்பு மிகுந்ததாக கருதப்பட்டாலும் இந்த முறை வரக்கூடிய கடைசி பங்குனி வெள்ளிக்கிழமை என்பது உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து பங்குனி உத்திரமாக வருகிறது. அதனால் இந்த நாள் மிகவும் சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் நாம் செய்ய வேண்டிய ஒரு தீப வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். –

இந்த தீபத்தை வீட்டிலும் ஏற்றலாம் ஆலயத்திற்கு சென்றும் ஏற்றலாம். எந்த தெய்வத்தை நினைத்துக் கொண்டு வேண்டுமானாலும் ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும். கர்ம வினைகள் அகழும். கடன் பிரச்சனை தீரும். நம் வாழ்வில் இதுவரை நாம் அனுபவித்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலகும்.

அந்த அளவிற்கு அதி அற்புதமான ஒரு தீப வழிபாடாக தான் இந்த வழிபாடு திகழ்கிறது. இந்த தீபத்தை ஏற்றக்கூடிய இடத்தில் முதலில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு பசு மாட்டின் சாணம் கிடைக்கும் பட்சத்தில் அந்த சாணத்தை எடுத்து கோலத்தின் மீது வைக்கலாம். சாணம் கிடைக்காது என்பவர்கள் மஞ்சளில் சிறிது பச்சை கற்பூரம், சிறிது ஜவ்வாது கலந்து பன்னீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிணைந்து வட்ட வடிவில் ஒரு தட்டு போல தட்டிக் கொள்ளுங்கள். இதை கோலத்துக்கு மேல் வைக்க வேண்டும். –

பிறகு அதற்கு மேல் கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையின் நடுவே சிறிதளவு நவதானியத்தை பரப்ப வேண்டும். அந்த நவதானியத்திற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அந்த அகல்விளக்கில் கல்லுப்பை போட்டு நிரப்பிக்கொள்ளுங்கள். அடுத்ததாக அந்த கல்லுப்பிற்கும் மேல் மறுபடியும் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அதில் பஞ்சுத்திரி அல்லது தாமரைத் தண்டு திரி அல்லது பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய திரி இவை மூன்றில் ஏதாவது ஒரு திரியை போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த தீபம் குறைந்தபட்சம் 48 நிமிடங்கள் எரிய வேண்டும். இந்த தீபம் எந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் எரிகிறதோ அந்த அளவிற்கு நம்மிடமும் நம் வீட்டிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். நம்முடைய கஷ்டங்களும் பிரச்சனைகளும் விலகும். செல்வ செழிப்புடன் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். இதையும் படிக்கலாமே:பங்குனி உத்திர பண வசிய தாந்திரீகம் பங்குனி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது ஒரு நேரத்திலாவது இந்த தீபத்தை நம்முடைய வீட்டில் நாம் ஏற்றுவதன் மூலம் நம்முடைய கஷ்டங்கள் அனைத்திற்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Von Admin