முழு முதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய தடைகள் அனைத்தையும் நீக்கி வேண்டிய வரத்தை தரக்கூடியவராகவும் அவர் திகழ்கிறார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக திகழ்வதுதான் சங்கடஹர சதுர்த்தி. அந்த சங்கடஹர சதுர்த்தி என்பது ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி புதன்கிழமையோடு சேர்ந்து வருகிறது.
புதன்கிழமை என்பதும் விநாயகப் பெருமானின் வழிபாட்டிற்கு உரிய கிழமையாகவும், விநாயகப் பெருமான் அவதரித்த கிழமையாகவும் திகழ்வதால் அன்றைய தினம் சங்கடஹர சதுர்த்தி வருவது மிகவும் சிறப்பு. அப்படிப்பட்ட நாளில் நாம் செய்யக்கூடிய ஒரு பரிகாரமானது நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய வறுமையை முற்றிலும் நீக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள்.
புதன் பகவான் என்பவர் புத்தி காரணமாக திகழக் கூடியவர். அப்படிப்பட்ட புத்தியை சிறப்பான முறையில் மாற்றுவதற்கு உதவக்கூடிய தெய்வமாக தான் விநாயகப் பெருமான் திகழ்கிறார். இவர்கள் இருவரின் அருளையும் பரிபூரணமாக பெற்ற நாளாக தான் இந்த முறை வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி என்பது திகழ்கிறது. அந்த வகையில் நம்முடைய செல்வ செழிப்பை அதிகரிப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம். –
இந்த பரிகாரத்தை புதன் கோரையில் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் வரக்கூடிய புதன் கோரையான 8 மணியிலிருந்து 9 மணி என்பது இந்த பரிகாரத்தை செய்வதற்கு மிகவும் சிறப்பு மிகுந்த நேரமாக திகழ்கிறது. இதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் வேண்டும்.
அதில் ஒன்று விநாயகப் பெருமானுக்கு உகந்த அருகம்புல். மேலும் நம்முடைய செல்வத்தை வசீகரம் செய்யும் பொருளான வசம்பு. இப்பொழுது இரவு நேரத்தில் வரக்கூடிய புதன் கூரையில் ஒரு வெள்ளை நிற நூலை எடுத்து அதில் அருகம்புல் மற்றும் ஒரு சிறிய துண்டு வசம்பை வைத்து நன்றாக கட்டிக் கொள்ளுங்கள். பிறகு இதை உங்களுடைய உள்ளங்கையில் வைத்துக் கொண்டு முழு மனதோடு விநாயகப் பெருமானை நினைத்து செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் பணம் பணவரவு உண்டாக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
இதோடு ஒரு விநாயகரின் ஒரு மந்திரம் இருக்கிறது இந்த மந்திரத்தை கூறும் பொழுது நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். மந்திரம் “ஓம் கம் கௌம் கணபதயே விக்னே விநாஷினே ஸ்வாஹா” –
மந்திரத்தை கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய அருகம்புல் மற்றும் வசம்பை நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். எத்தனை இடத்தில் பணத்தை வைத்து எடுக்கிறோமோ அத்தனை எண்ணிக்கையில் தயார் செய்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்று என்ற வீதம் நாம் வைத்துக் கொள்ளலாம்.
இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் அன்றைய நாளில் அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். மந்திரத்தை கூறாமல் வெறும் பரிகாரத்தை மட்டும் செய்கிறோம் என்று நினைப்பவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. இதையும் படிக்கலாமே:ராஜயோகம் தரும் சங்கடஹர சதுர்த்தி தீபம் சிறப்பு மிகுந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கும், பரிகாரத்திற்கும் பலன் அதிகமாகவே கிடைக்கும்.
அந்த வகையில் புதன்கிழமையோடு சேர்ந்து வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.