நம்முடைய முன் ஜென்மத்தின் கர்ம வினைகளின் அடிப்படையிலும் நாம் செய்த பாவத்தின் அடிப்படையிலும் சிலருக்கு ஜாதக ரீதியாகவே பிறக்கும் பொழுதே சில தோஷங்களோடு பிறந்திருப்பார்கள்.
இன்னும் சிலரோ தங்கள் வாழ்நாளில் செய்த பாவங்களினால் அவர்களுக்கு தோஷங்கள் உண்டாகி இருக்கும். மேலும் நாம் இருக்கும் இடத்தை பொருத்தும் நமக்கு மனை தோஷம், போன்ற தோஷங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு தோஷத்திற்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்களை நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
அப்படிப்பட்ட தோஷங்களால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு வீட்டில் போட வேண்டிய தூபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தோஷம் நீக்கும் பரிகாரம் பொதுவாகவே ஒரு வீட்டில் எந்த அளவிற்கு நறுமணம் அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும் என்றும் நேர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரும் என்றும் கூறப்படுகிறது.
எதிர்மறை ஆற்றல்கள் நீங்கினாலே நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்றுதான் பொருள்படும். அதனால்தான் காலையிலும் மாலையிலும் வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற வாசனை மிகுந்த பொருட்களை நாம் உபயோகப்படுத்துகிறோம். அந்த வகையில் சாம்பிராணி தூபம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. –
சாம்பிராணி தூபத்தை நம் போடும்பொழுது முடிந்த அளவிற்கு கடைகளிலிருந்து கிடைக்கக்கூடிய ரெடிமேட் சும்பிராணியை பயன்படுத்தாமல் சில குறிப்பிட்ட பொருட்களை ஒன்றாக சேர்த்து சாம்பிராணி பொடியாக தயார் செய்து உபயோகப்படுத்தும் பொழுது அதில் நமக்கு அளவில்லா பலன் கிடைக்கும். செல்வ வளம் பெருகுவதற்கும், தோஷங்கள் நீங்குவதற்கும், எதிர்மறை ஆற்றல்கள் விலகவும், பண வசியத்தை ஏற்படுத்தவும் பல விதமான பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றன.
அவற்றை வாங்கி நாம் முறையாக தூபம் போடும் பொழுது அந்த பொருட்களின் பலனால் நாம் நினைத்தது நினைத்தபடி நடக்கும். அந்த வகையில் நமக்கும், நம் வீட்டில் இருப்பவர்களுக்கும், நம் வீட்டிற்கும் ஏதாவது தோஷம் ஏற்பட்டு அதன் மூலம் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்னும் பட்சத்தில் வியாழக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் இந்த ஒரு தூபத்தை போட்டால் போதும். அதுவும் குறிப்பாக மாலை 6:30 மணிக்கு மேல் வீடு முழுவதும் தூபம் போடுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.-
இதற்கு நாம் இரண்டே இரண்டு பொருட்களை மட்டும் சேர்த்து போட வேண்டும். அவை தான் வெண்கடுகு மற்றும் கருப்பு குங்கிலியம். வெண்கடுகும் கருப்பு குங்கிலியமும் நம் வீட்டில் இருக்கக் கூடிய தோஷங்களையும் எதிர்மறை ஆற்றல்களையும் விலக்கும் சக்தி வாய்ந்ததாக திகழ்கிறது.
இவை இரண்டுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சரிசமமான அளவு வாங்கி வந்து வியாழக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஆறு முப்பது மணிக்கு மேல் தூபம் போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும். இதே போல் தொழில் செய்யும் இடங்களிலும் வியாபாரம் செய்யும் இடங்களிலும் இந்த தூபத்தை நாம் போடுவதன் மூலம் அங்கு இருக்கக்கூடிய தோஷங்கள் விலகி வியாபாரம் சிறப்பாக நடந்து செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
சாதாரண பொருட்கள்தான் என்று நினைத்து நாம் கவனிக்காமல் விடக்கூடியவை தான் நமக்கு பெரிய அளவில் உதவி செய்யும். அந்த வகையில் முழு நம்பிக்கையுடன் இந்த இரண்டு பொருட்களை சேர்த்து தூபம் போட்டு பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த தோஷங்கள் அனைத்தும் விலகும். மேலும் புதிதாக எந்த வித தோஷமும் ஏற்படாது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.