மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று லாபகரமாக சிந்திப்பீர்கள். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் ஒரு ஆதாயம் தேடுவீர்கள்.
மூச்சு விட்டால் கூட அதற்கு என்ன லாபம் என்று சிந்திக்க கூடிய அளவுக்கு இன்று உங்களிடம் அதிகப்படியான சுயநலம் இன்று வெளிப்படும். அது ஏன் என்று தெரியாது. எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்காது அல்லவா. இந்த சுயநலம் சில பல பிரச்சனைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று வரவு செலவு கணக்கை பார்த்து எதிர்காலத்தை பற்றிய சிந்தனையில் அதிகமாக மூழ்கி இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. பிரச்சனைகள் பெருசாக இல்லை என்றாலும், சில சமயம் நம்முடைய மனது நாம் சொல்வதை கேட்காது. நம்முடைய மூளை அதிகமாக யோசிக்க துவங்கிவிடும். அப்போது கொஞ்சம் கூடுதல் டென்ஷன் வரும். உங்களுக்கு இன்று இதுபோல சிரமங்கள் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த பணம் கையை வந்து சேரும். நிதிநிலைமை சீராகும். சொத்து சுகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பெரியவர்களுடைய பேச்சை கேட்டு நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும். அடம்பிடித்து எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். நீண்ட நாட்களாக செய்யாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். இன்று காரிய சித்தி ஆகும் நாள். சந்தோஷத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். தயாராக இருக்க வேண்டும். வரும் வா