வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் (11) காலை நடைபெற்றது.
மகா கும்பாபிசேகத்திற்கான பூர்வாங்க கிரியைகள் இன்று அதிகாலை 04.32 மணிக்கு ஆரம்பாமாகி தொடர்ந்து வரும் நாட்களில் கிரியைகள், விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொண்டனர்.
