ராமபிரான் அவதரித்த தினமாக திகழ்வதுதான் ராமநவமி. பங்குனி மாதத்தில் அமாவாசை முடிந்து வரக்கூடிய வளர்பிறை நவமி திதி அன்றுதான் ராமபிரான் அவதரித்தார். அந்த ராமநவமி என்பது இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் நாம் கூற வேண்டிய ராம மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ராம மந்திரம் அஷ்டமி, நவமி போன்ற திதிகளில் எந்தவித நல்ல காரியத்தையும் செய்வதை தவிப்பார்கள். அப்படிப்பட்ட இரண்டு திதிகளில் தான் பெருமாள் தன்னுடைய அவதாரத்தை மேற்கொண்டார். கிருஷ்ணராக அவதாரம் செய்த திதி தான் அஷ்டமி திதி. அந்த அஷ்டமியை கோகுலாஷ்டமி என்று கூறுவது உண்டு. அதேபோல் நவமி திதி அன்று ராமபிரனாக அவர் அவதரித்ததால் அந்த திதியை ராமநவமி என்று பலரும் வழிபாடு செய்கிறார்கள். அப்படிப்பட்ட நாளில் நாமும் ராமபிரானை வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். –
யார் ஒருவர் ராம நாமத்தை அனுதினமும் உச்சரித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களுக்கு ராமபிரானின் அருளோடு மட்டுமல்லாமல் சீதா தேவியின் அருளும், லக்ஷ்மனரின் அருளும், அதே சமயம் ஆஞ்சநேயரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறுவது உண்டு.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ராம நாமத்தை கண்டிப்பான முறையில் நாம் ராவ நவமி அன்றாவது கூற வேண்டும். இந்த ராம நாமத்தை கூறுவதோடு ராமபிரானுக்குரிய ஒரு மந்திரத்தை நம்மால் இயன்ற அளவு குறைந்தபட்சம் ஒருமுறை மட்டுமாவது முழு மனதோடு ஆத்மார்த்தமாக ராமபிரானை நினைத்து கூறினோம் என்றால் அந்த மந்திரத்தால் நமக்கு பலவிதமான பலன்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
இந்த மந்திரத்தை ராம நவமி அன்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். முடிந்த அளவிற்கு காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூறுவது என்பது சிறப்பு. அருகில் ராமரின் ஆலயம் இருக்கும் பட்சத்தில் அந்த ஆலயத்திற்கு சென்று ராமபிரானை வழிபாடு செய்யும்பொழுதும் இந்த மந்திரத்தை நாம் கூறலாம் அல்லது ஆஞ்சநேயரின் ஆலயத்தில் அமர்ந்து கொண்டும் இந்த மந்திரத்தை நாம் கூறலாம். –
இந்த மந்திரத்தை கூறும் பொழுது நம்முடைய கையில் கண்டிப்பான முறையில் துளசி இலைகளை நாம் வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த மந்திரத்திற்கு உரிய பலனை நம்மால் பெற முடியும். கையில் துளசி இலைகளை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை நம்மால் இயன்ற முறை கூறி முடித்துவிட்ட பிறகு அந்த துளசி இலைகளை வீட்டு பூஜை அறையிலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ராமரின் பரிபூரணமான அருள் அந்த துளசி இலைக்கும் கிடைக்கப்பெற்று அது இருக்கக்கூடிய இடத்தில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
மந்திரம் “ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம” இதையும் படிக்கலாமே:வேண்டிய வரம் கிடைக்க வாராஹி மந்திரம் இந்த ஒரு எளிமையான மந்திரத்தை ராம நவமி அன்று மறக்காமல் இந்த முறையில் உச்சரிப்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும் நிறைவான செல்வத்தை பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.