யாழ்.திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை(29.4.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்தும் பதினெட்டுத் தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழா
நடைபெறும்.

அடுத்தமாதம்- 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஞ்சத் திருவிழாவும், 14 ஆம் திகதி சனிக்கிழமை இரவு சப்பைரத உற்சவமும், 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் திங்கட்கிழமை காலை-09 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், இரவு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவப் பெருந் திருவிழா இடம்பெறவுள்ளதுடன், தேர், தீர்த்தம் தவிர்ந்த நாட்களில் காலை உற்சவம் காலை-09 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகும். மாலை உற்சவம் மாலை-04 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகும்.

Von Admin