பொதுவாக சுமங்கலி கைகளால் தானம் பெறுவதும், சுமங்கலி கைகளால் தானம் கொடுப்பதும் மிகுந்த நன்மைகளை கொடுக்கக்கூடிய ஒரு பரிகாரமாக இருந்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட சில பொருட்களை சுமங்கலி பெண்கள் தானம் கொடுப்பது கூடாது என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படியான தானம் கொடுக்க கூடாத பொருட்கள் என்னென்ன? எதனால் தானம் கொடுக்கக் கூடாது?
சுமங்கலி பெண்கள் வீட்டிற்கு வந்தால் வெறும் கையுடன் அனுப்பக்கூடாது என்று கூறுவார்கள். சுமங்கலி பெண்கள் மட்டுமல்ல, விருந்தினராக யார் வீட்டிற்கு வந்தாலும் அவர்களை வெறும் கையில் அனுப்பாமல் தாம்பூலம் கொடுத்து அனுப்புவது முறையாகும். அது மட்டும் அல்லாமல் பசியுடனும் அனுப்பக்கூடாது என்று கூறுவார்கள். நம் முன்னோர்கள் விருந்தினராக வந்தவர்களுக்கு ஒரு சொம்பு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அது போல யார் வீட்டிற்கு வந்தாலும் தண்ணீர் அல்லது நீர் மோர் கொடுத்து வழி அனுப்ப வேண்டும். –
இப்படி தானம் கொடுப்பதின் சிறப்பம்சங்களை நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அப்படி இருந்தும் இந்த பொருட்களை ஏன் தானம் கொடுக்கக் கூடாது என்று கூறுகிறார்கள் தெரியுமா? தானம் கொடுக்க கூடாத பொருட்கள் என்னென்ன? முதலாவதாக கண்ணாடி பொருட்களை தானம் கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள். குறிப்பாக முகம் பார்க்கும் கண்ணாடியை சுமங்கலி பெண்கள் யாருக்கும் தானம் கொடுக்கக் கூடாது.
முகம் பார்க்கும் கண்ணாடியில் மகாலட்சுமி வசிப்பதாக ஐதீகம் உண்டு. எப்பொழுதும் சுமங்கலி பெண்கள் கிழக்கு நோக்கி முகம் பார்க்கும் கண்ணாடியில் நெத்தியின் வகிட்டில் குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் லட்சுமி கடாட்சம் பெருகும், வருமானம் உயரும், கைராசி ஆகும், பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை எனவே ஒருபோதும் இந்த முகம் பார்க்கும் கண்ணாடியை மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது. கண்ணாடி உடைந்தால் வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்வதற்கும் இதுதான் காரணம். மேலும் தானம் கொடுக்கக் கூடாத பொருட்களில் ஒன்றாக இருப்பது ‘குங்குமச்சிமிழ்’. குங்குமச்சிமிழ் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு பொதுவாக தானம் கொடுக்கின்றனர் ஆனால் சுமங்கலி பெண்களுடைய கைகளால் குங்குமச்சிமிழ் தானம் கொடுக்கக் கூடாது. அப்படி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் கையால் கொடுப்பது சிறப்பு! –
மூன்றாவதாக குத்து விளக்கு யாருக்கும் தானமாக கொடுக்கக்கூடாது. பல இடங்களில் இன்றும் பரவலாக குத்துவிளக்கை பரிசாக, தானமாக கொடுக்கப்பட்டு வருகிறது. குத்துவிளக்கை சுமங்கலி பெண்கள் தங்களுடைய கைகளால் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. அதில் மகாலட்சுமி பூரணமாக நிறைந்து இருப்பதால், உங்களுடைய கைகளால் குத்து விளக்கை தானம் கொடுத்தால், மகாலட்சுமி கடாட்சம் உங்களை விட்டு நீங்கி விடுவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. ஒருவர் பயன்படுத்திய வஸ்திரத்தை கிழிந்த நிலையில் இன்னொருவருக்கு தானம் கொடுப்பது மகாபாவமாக கருதப்படுகிறது.
அதிலும் சுமங்கலி பெண்கள் கிழிந்த வஸ்திரங்களை மற்றவர்களுக்கு தானம் கொடுத்தால், அந்த வீட்டில் தரித்திரம் தாண்டவம் ஆடும். மூதேவி வந்து குடியேறுவால் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள உண்மையாகும். எனவே எந்த காரணத்தைக் கொண்டும் கிழிந்த துணிமணிகளை எவருக்கும் தானம் கொடுத்து பாவத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள். முடிந்தால் புதிய துணி அல்லது பழைய நல்ல நிலையில் இருக்கக்கூடிய துணிகளை தானம் கொடுப்பது நல்லது. ஐந்தாவதாக செல்வ கடவுள்களாக இருக்கக்கூடிய லட்சுமி மற்றும் லட்சுமி குபேரர் படங்களை ஒருபோதும் சுமங்கலி பெண்கள் மற்றவர்களுக்கு தானம் கொடுக்க கூடாது. அதிலும் சுவாமி படங்களை தானம் கொடுப்பவர் கண்ணாடி போட்ட பிரேம் வைத்த படங்களை தானம் கொடுப்பது நல்லதல்ல!