யாழ்ப்பாணம் கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ 6ஆம் திருவிழா 07.04.02022 வியாழக்கிழமை இடம்பெற்றது.
ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.
எதிர்வரும் 11ஆம் திகதி 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழாவும் 13ஆம் திகதி வேட்டைத்திருவிழாவும் மறுநாள் 14ஆம் திகதி சப்பர திருவிழாவும் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி காலை 7 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று தொடர்ந்து தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது. மறுநாள் காலை தீர்த்த திருவிழாவும் மாலை கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.