ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை தினத்தன்று விரதம் இருக்கும் வழக்கம் இந்து மக்களிடையே இருந்து வரும் நிலையில் ஐப்பசி மாத கார்த்திகை விரதம் இருந்தால் கோடி நன்மை என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் 

ஐப்பசி மாத கார்த்திகை தினத்தன்று முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்பதும் இந்த தினத்தில் பகல் இரவு உறங்காமல் முருகனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும் என்றும் ஆன்மீகவாதிகள் கூறியுள்ளனர் 

தொடர்ந்து 12 ஆண்டுகள் கார்த்திகை தினத்தில் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். ஐப்பசி மாதம் கார்த்திகை தினத்தன்று விரதம் இருந்து அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் பெறும் பலன்கள் கிடைக்கும் என்றும் முருகனின் அருளால் நான் எந்தவிதமான துன்பம் இல்லாமல் வாழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது

Von Admin